பிரித்தானிய அமெரிக்க விமானப்படைத் தளம் அருகே பரபரப்பு - ஆபத்தான வெடிபொருட்களுடன் சிலர் கைது
அமெரிக்க விமானப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரித்தானியாவின் “ஆர்.ஏ.எஃப் ஃபேயர்ஃபோர்ட் (RAF Fairford)” விமானப் படைத்தளத்திற்கு அருகில் வெடிபொருள் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் பலரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த பகுதிகளில் பாரிய தாக்குதல் ஒன்று நடத்தப்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் பிரித்தானிய பொலிஸார் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பிரித்தானிய இராணுவத்தின் சிறப்பு வெடிபொருள் அகற்றும் நிபுணர்கள் குழு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களை சோதனையிட்டுள்ளன.
இதன்போது, அருகிலுள்ள கிராமப்புற குடியிருப்புப் பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விரைந்து செயற்பட்ட பொலிஸார்
நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக குளொஸ்டர்ஷயர் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரானிய இலக்குகள் மீது, தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்காவிற்கு இந்த விமானப் படைத்தளத்தைப் பயன்படுத்த பிரித்தானியா அனுமதி அளித்திருந்தது.

இதனையடுத்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், நாட்டின் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் நிலைமைகள் குறித்து தீவிரமாக அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.