சிங்கங்களும் பன்றிகளும் அறுவான்களும் குறுக்கால போவான்களும்?

Tamils ITAK General Election 2024 Parliament Election 2024 Sri Lanka General Election 2024
By Nillanthan Oct 16, 2024 03:45 AM GMT
Report

கடந்த 15 ஆண்டுகளில் ஜனாதிபதித் தேர்தல்களின்போது வாக்குத் திரட்சி இருந்தது. 2010,2015,2019இல் நடந்த தேர்தல்களில் தமிழ் மக்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானித்து திரண்டு வாக்களித்தார்கள்.

அங்கே ஒரு திரட்சி இருந்தது. அதேசமயம் ஏனைய தேர்தல்களில் குறிப்பாக,நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களைத் திரட்ட முடியவில்லை.

தமிழ் மக்கள் சிதறி வாக்களித்தார்கள்.இம்முறை தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உடைவானது அந்தச் சிதறலை மேலும் அதிகப்படுத்துமா?

முன்னாள் அமைச்சர்களுக்கு காலக்கெடுவுடன் எச்சரிக்கை விடுத்துள்ள அநுர அரசு

முன்னாள் அமைச்சர்களுக்கு காலக்கெடுவுடன் எச்சரிக்கை விடுத்துள்ள அநுர அரசு


தமிழ்த்தேசிய அரசியல் களம்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்திய பொழுது “தேசமாகத் திரள்வோம்” என்று கூறப்பட்டது.

ஆனால் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகளாகச் சிதறுவோம் அல்லது குழுக்களாகச் சிதறுவோம் அல்லது கட்சிக்குள் அணிகளாகச் சிதறுவோம் அல்லது சுயேச்சைகளாகச் சிதறுவோம் என்ற கோஷத்தை முன்வைக்க வேண்டி வருமா?

சிங்கங்களும் பன்றிகளும் அறுவான்களும் குறுக்கால போவான்களும்? | Past 3 Years Elections Tamil Peoples

நடப்பு நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்தால் தமிழ்த்தேசிய அரசியல் களம் அப்படித்தான் காட்சி தருகின்றது.

தேசியவாத அரசியல் என்பது மக்களைத் திரளாகக் கூட்டிக்கட்டுவது.மக்களை கூட்டுணர்வின் அடிப்படையில் ஒரு தேசமாகத் திரட்டுவது. ஆனால் கட்சிகள் மத்தியில் கூட்டுணர்வு இருந்தால்தான் அவை மக்களைக் கூட்டிக்கட்ட முடியும்.

கட்சிகள் மத்தியில் அது இல்லையென்றால் எப்படி மக்களைத் தேசமாகத் திரட்டுவது? உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி ஒரு தனிநபரின் கருவியாக மாறி அந்தத் தனிநபரை வெல்ல வைப்பதற்காக அவருடைய விசுவாசிகளை வேட்பாளர் பட்டியலில் சேர்த்திருக்கின்றது.

அந்த விசுவாசிகள் தமக்கு விசுவாசமான தலைவருக்காக வாக்குகளை சேகரித்துக் கொடுப்பார்கள்.ஒரு மூத்த கட்சியானது வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொழுது என்னென்ன அளவுகோல்களை வைத்து அதைச் செய்திருக்க வேண்டும் ?

தேசியக் கூட்டுணர்வின் ஒரு திரட்சி

ஆனால் அதைக் கேள்வி கேட்க வேண்டிய மூத்தவர்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிறீதரனும் என்ன செய்கிறார்கள்?

சிறீதரனுடைய ஆதரவாளர்கள் ரஜினிகாந்தின் படத்தில் வரும் ஒரு பஞ் டயலாக்கை பரவலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். “சிங்கம் எப்பொழுதும் சிங்கிளாகத்தான் வரும். பன்றிகள்தான் கும்பலாக வரும்” என்ற வசனம் அது.

சிங்கங்களும் பன்றிகளும் அறுவான்களும் குறுக்கால போவான்களும்? | Past 3 Years Elections Tamil Peoples

அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி சிங்கங்களும் பன்றிகளுமாக, சிவஞானம் கூறுவதுபோல “அறுவான்களும் குறுக்கால போவான்களுமாக” சிதறிப்போகிறது என்று பொருள்.

அது தேசியக் கூட்டுணர்வோடு ஒரு திரட்சியாக இல்லை. வேட்பாளர் பட்டியல் வெளிவந்ததிலிருந்து கட்சிக்குள் மகளிர் அணியும் தவராசா அணியும் ஏனைய அணிகளும் நொதிக்கத் தொடங்கிவிட்டன.

தவராசா அணி சுயேட்சையாகப் போட்டியிடுகின்றது.இவ்வாறு தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பூசல்கள் ஏற்கனவே தூர்ந்து போன கட்சியை மேலும் சிதைக்கக்கூடும்.

அவ்வாறு தமிழரசுக் கட்சி பலவீனமடையும் பொழுது அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு வேறு கட்சிகள் அல்லது வேறு கூட்டுக்கள் உண்டா?

வெற்றிபெற்றால் சலுகைகளை ஏற்கப்போவதில்லை என்று உறுதியளித்துள்ள வேட்பாளர்

வெற்றிபெற்றால் சலுகைகளை ஏற்கப்போவதில்லை என்று உறுதியளித்துள்ள வேட்பாளர்


அரசியல் தரிசனமும் நெகிழ்வும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தேசியவாத அரசியல் குறித்த பொருத்தமான நடைமுறைச் சாத்தியமான தரிசனங்களைக் கொண்டிராத ஒரு கட்சி.தங்களைத் தியாகிகள் ஆகவும் புனிதர்களாகவும் காட்டுவதற்காக மற்றவர்களுக்குத் துரோகிப் பட்டம் சூட்டும் ஒரு கட்சி.

தன்னை புத்திசாலிகள், கொள்கைவாதிகளின் கட்சியாகக் காட்டிக்கொள்ளும் ஒரு கட்சி. தேசம் என்பது புனிதர்கள், தியாகிகள், கொள்கைவாதிகளை மட்டும் கொண்டதல்ல.

திருடர்கள், அயோக்கியர்கள், சமானியர்கள் என்று எல்லா வகைப்பட்டவர்களினதும் திரட்சிதான் தேசம்.முன்னணியின் அரசியல் பெருந்திரட்சிக்கு உரியதல்ல. அதனால் முதன்மைக் கட்சியாக மேலுயர முன்னணியால் இதுவரை முடியவில்லை.

சிங்கங்களும் பன்றிகளும் அறுவான்களும் குறுக்கால போவான்களும்? | Past 3 Years Elections Tamil Peoples

அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. சாத்தியமானவற்றுக்கூடாகத்தான் கொள்கையைப் பரவலாக்கலாம், மக்கள் மயப்படுத்தலாம், அதை ஒரு திரண்ட அரசியல் சக்தியாக மாற்றலாம்.தூய தங்கத்தை வைத்துக்கொண்டு ஆபரணம் செய்ய முடியாது.

அதில் செம்பு கலக்க வேண்டும்.செம்பைக் கலக்காவிட்டால் தங்கம் பிரயோகநிலைக்கு வராது.அப்படித்தான் நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திக்காவிட்டால் கொள்கை மக்கள் மயப்படாது.

இதுதான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் உள்ள பிரதான பலவீனம். அவர்களால் தேசத்தைத் திரட்ட முடியாது.

எனவே தமிழரசுக் கட்சி சிதையும்போது ஏற்படும் வெற்றிடத்தில் ஒரு பிரதான நீரோட்டக் கட்சியாக மாறி ஆசனங்களைக் கைப்பற்றத் தேவையான அரசியல் தரிசனமும் நெகிழ்வும் முன்னணியிடம் இல்லை.

அநுரவின் வெற்றியில் மறைந்திருக்கும் ரணிலின் தந்திரம்! அம்பலப்படுத்தும் முக்கியஸ்தர்

அநுரவின் வெற்றியில் மறைந்திருக்கும் ரணிலின் தந்திரம்! அம்பலப்படுத்தும் முக்கியஸ்தர்


தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு 

அடுத்தது குத்துவிளக்குக் கூட்டணி. அந்த கூட்டணி ஜனாதிபதித் தேர்தலின் பின் சங்குச் சின்னத்தை கைப்பற்றியதன் மூலம் சங்குக் கூட்டணியாக மாறியிருக்கிறது.

அங்கேயே சர்ச்சைகள் உண்டு. ஒரு கூட்டு வெற்றியை அதன் பங்காளிகளில் ஒரு பகுதி மட்டும் சுவீகரிக்கப் பார்க்கின்றது.சங்கு இப்பொழுது தமிழ்த் தேசிய பொதுக்கூட்டமைப்பின் சின்னம் அல்ல.

ஏனெனில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு இப்பொழுது இல்லை.அதற்குள் இருந்த தமிழ் மக்கள் பொதுச்சபை தேர்தலில் ஈடுபடவில்லை.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கமும் தமிழ் மக்கள் கூட்டணியும் அக்கூட்டுக்குள் இல்லை.எனவே சங்கு பொதுக் கட்டமைப்பின் சின்னமல்ல.சங்குக்கு விழுந்த 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளும் சஙகச் சின்னத்தை எடுத்து வைத்திருக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்குமா?

சங்குக்கு விழுந்த வாக்குகள் தேசத் திரட்சிக்கு விழுந்த வாக்குகள்.அதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேசத் திரட்சி என்ற அடிப்படையில் வாக்களித்திருக்கிறார்கள்.

சிங்கங்களும் பன்றிகளும் அறுவான்களும் குறுக்கால போவான்களும்? | Past 3 Years Elections Tamil Peoples

அரியநேத்திரன் ஒரு குறியீட்டு வேட்பாளர். ஏறக்குறைய ஒரு துறவிபோல அவர் தேர்தலில் நின்றார். அவருக்கு வாக்குத் திரட்டுவதற்காக மக்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் துறவிகளைப்போல சம்பளம் வாங்காமல் இரவு பகலாக வேலை செய்தார்கள்.

அவரை வேட்பாளராக முன்னிறுத்திய பொதுக் கட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கித்தான் உழைத்தன என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனாலும் பொது வேட்பாளரை நோக்கி அவர்கள் திரட்டிய வாக்குகள் பொதுவானவை. பொதுவான வாக்குகள் இப்பொழுது ஐந்து கட்சிகளின் கூட்டமைப்பாக உள்ள சங்குக் கூட்டணிக்கு மட்டும் கிடைக்குமா?

கிடைக்காது. உதாரணமாக, கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி சங்குக்காக வேலை செய்தது.அது முழுமையாக வேலை செய்ததா இல்லையா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அங்கு கிடைத்த வாக்குகளுக்குள் தமிழரசு கட்சியின் வாக்குகளே அதிகம் உண்டு.

எனவே சிறீதரனா? சங்கா? என்று வரும் பொழுது சிறீதரனின் ஆதரவாளர்கள் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள். அப்படித்தான் மட்டக்களப்பிலும் அரியநேத்திரனுக்காக சிறீநேசனும் உட்பட பல மூத்த தமிழரசுக் கட்சிக்காரர்கள் ஒன்றாக நின்று உழைத்தார்கள்.

தேசிய கூட்டுணர்வுக்கு விரோதமானவை

தங்களின் ஒருவருக்கு அவர்கள் பொதுவாக வாக்குத் திரட்டினார்கள். ஆனால்,நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுடைய வாக்குகள் வீட்டுக்குத் தான் விழும்.சங்குக்கு அல்ல. அப்படித்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அருண் தம்பிமுத்து திரட்டிய வாக்குகளும் சங்குக்கு விழாது.

மேலும் யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சரவணபவன்,தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் உட்பட பலரும் சங்கின் வெற்றிக்காக உழைத்திருக்கிறார்கள்.

அவர்கள் சங்கு கூட்டணிக்குள் நிற்கவில்லை.மாறாக தவராசாவின் சுயேட்சைக் குழுவாக களமிறங்குகிறார்கள்.அவர்கள் சங்குக்கு திரட்டிய வாக்குகள் இனி அவர்களுடைய சுயேட்சைக் குழுவுக்குத்தான் அதிகமாக விழும்.

அப்படித்தான் இப்பொழுது யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக நிற்கும் தமிழர் சம உரிமை அமைப்பும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்காக விசுவாசமாக உழைத்தது.அந்த அணி இப்பொழுது சுயேச்சையாகக் கேட்கின்றது.

சிங்கங்களும் பன்றிகளும் அறுவான்களும் குறுக்கால போவான்களும்? | Past 3 Years Elections Tamil Peoples

எனவே பொது வேட்பாளருக்காக அவர்கள் சேகரித்த வாக்குகள் அந்த சுயேட்சைக்கு விழுமா அல்லது சங்குக்கு விழுமா? தமிழ் மக்கள் சின்னத்தைப் பார்த்து மயங்குவார்களா? இதுதான் பிரச்சினை.

ஒரு சன்னியாசி போல அரியநேத்திரன் தேர்தலில் நின்ற பொழுது தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு அவருக்கு வாக்களித்தார்கள்.அதே கூட்டுணர்வோடு இப்பொழுது வாக்களிக்க மாட்டார்கள்.

கட்சி விசுவாசம், தனி நபர் விசுவாசம்,பிரதேச விசுவாசம்,ஊர் விசுவாசம் போன்ற பல காரணிகளாலும் வாக்குகள் சிதறடிக்கப்படும் ஆபத்து அதிகமுள்ள ஒரு தேர்தல் இது.

மேற்சொன்ன அனைத்து விசுவாசங்களும் தேசியக் கூட்டுணர்வுக்கு விரோதமானவை.பொது வேட்பாளருக்கான தேர்தலில் பிரசாரப் பணிகள் தொடங்கிய போது “எமக்காக நாம்” என்று கூறப்பட்டது.

ஆனால் நடக்கவிருக்கும் தேர்தலில் “எனக்காக நான்” என்பதுதான் நடைமுறையாக உள்ளது. அடுத்தது, விக்னேஸ்வரனின் கட்சி.

அது இப்போதைக்கு பிரதான நீரோட்டக் கட்சியாக பலமாக எழும் என்று நம்பமுடியாத ஒரு கட்சிச் சூழல்தான் காணப்படுகிறது. நடக்கவிருக்கும் தேர்தல் அந்த கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியைக் காட்டும்.

தமிழ் மக்களை வாக்காளர்களாகச் சிதறடிக்கும்

தொகுத்துப்பார்த்தல், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மட்டும் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சங்குக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜேவிபியின் கூட்டணி, சுயேட்சைக் குழுக்கள் என்று மொத்தம் 44 தரப்புகள் தமிழ் வாக்குகளைக் கேட்கப் போகின்றன.

இதில் அநுர அலை எந்த அளவுக்கு வாக்குகளைக் கவரும் என்பதை இப்பொழுது மதிப்பிடுவது கடினம். இப்படி ஒரு நிலையை கிழக்கில் அனுமதித்தால்,குறிப்பாக திருகோணமலையிலும் அம்பாறையிலும் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் அங்குள்ள சிவில் சமூகங்களிடம் உண்டு.

திருகோணமலையில் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் இது தொடர்பில் தலையிட்டிருக்கிறார். அங்கே போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டுள்ளது.

சிங்கங்களும் பன்றிகளும் அறுவான்களும் குறுக்கால போவான்களும்? | Past 3 Years Elections Tamil Peoples

அதனால் வாக்குகள் சிதறுவது தடுக்கப்பட்டு குறைந்தபட்சம் ஒரு பிரதிநிதித்துவமாவது பாதுகாக்கப்படலாம்.ஆனால் அம்பாறையில் நிலைமை அவ்வாறில்லை.

ஆகமொத்தம் வரும் நாடாளுமன்றத் தேர்தலானது தமிழ் மக்களை வாக்காளர்களாகச் சிதறடிக்கப் போகிறது.சில கிழமைகளுக்கு முன்பு தேசமாகத் திரள்வோம் என்ற கோஷம் ஜனாதிபதித் தேர்தலில் பலமாக ஒலித்தது.

ஆனால் துரதிஷ்டவசமாக நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கட்சிகளாகச் சிதறும் ஆபத்தே அதிகரித்து வருகின்றது. எனது நண்பர் ஒருவர் பின்வருமாறு கேட்டார் “இப்படியே சிதறிப்போனால் சனங்கள் “தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம்” என்று சலிப்படையக்கூடுமா?

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு

வெற்றிபெற்றால் சலுகைகளை ஏற்கப்போவதில்லை என்று உறுதியளித்துள்ள வேட்பாளர்

வெற்றிபெற்றால் சலுகைகளை ஏற்கப்போவதில்லை என்று உறுதியளித்துள்ள வேட்பாளர்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nillanthan அவரால் எழுதப்பட்டு, 16 October, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, உடுவில்

21 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
கண்ணீர் அஞ்சலி

மட்டக்களப்பு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US