ஈபிள் கோபுரத்தில் திடீர் தீ விபத்து!
பிரான்ஸிலுள்ள(France) ஈபிள் கோபுரத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள்(Eifel) டவர் மீது திடீரென தீ விபத்து ஏற்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாம் நிலைகளுக்கு இடைப்பட்ட மின் தூக்கியின் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஈபிள் கோபுரம்
இதையடுத்து அவசர நடவடிக்கையாக, சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கானோர், பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Video but seems not close
— Uncensored News (@Uncensorednewsw) December 24, 2024
Eiffel Tower Fire Forces Evacuation! 🇫🇷
A fire sparked in a lift shaft, forcing 1,200 visitors to evacuate. Firefighters got it under control, but the tower’s still closed for safety
And just 2 miles away, another fire broke out near St. Lazare station.… pic.twitter.com/EOz9m6WAKJ
மேலும், இந்த விபத்து சம்பவத்தில் பார்வையாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மின்கசிவுக்கான காரணம் குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
பிரபலமான சுற்றுலாத்தலம்
இந்த சம்பவத்தையடுத்து ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஈபிள் கோபுரம் உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும், ஒரு நாளைக்கு 15,000 முதல் 25,000 பார்வையாளர்கள் வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நினைவுச் சின்னம் தீப்பிடிப்பது இது முதல் முறையல்ல. ஜனவரி 1956 இல், கோபுரத்தின் தொலைக்காட்சி ஒலிபரப்பு அறையில் தீ விபத்து ஏற்பட்டது, இதனால் பெரும் சேதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |