அநுரவை கோபப்படுத்துவதை தவிர்த்த மோடி
தெற்காசிய பிராத்தியத்தில் பல சவால்களை சந்தித்து வரும் நிலையில், இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“அநுரவின்(Anura Kumara Dissanayaka) வெற்றியை இந்தியா ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்றது.
இந்தியாவுக்கு எதிராக செயற்பட்ட ஜேவிபி(JVP) அணியை பற்றி இந்தியாவிற்கும் நன்றாகவே தெரியும்.
எனவே, இந்தியா(India) எச்சரிக்கை உணர்வோடு அவசரப்பட்டு எதையாவது கூறி அவர்களை கோபப்படுத்தாமல் அனுப்பி வைக்கவே முடிவு செய்து இந்த சந்திப்பை நடத்தியுள்ளது” என்றார்.
இது தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |