மகிந்த ராஜபக்சவின் முக்கிய சகா திலித் ஜயவீரவுடன் கைகோர்ப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) முக்கிய சகாக்களில் ஒருவரான எஸ்.எம்.சந்திரசேன, திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாக்களில் ஒருவராக இருந்த எஸ்.எம்.சந்திரசேன, மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகள் பலவற்றை வகித்துள்ளார்.
முக்கிய பொறுப்புக்கள்
அத்துடன், மொட்டுக் கட்சி எனப்படும் பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மட்டத்தில் முக்கிய பொறுப்பிலும், கட்சியின் அநுராதபுர மாவட்ட தலைவராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
மேலும், கடந்த பொதுத் தேர்தலின் போதும் மொட்டுக் கட்சியின் சார்பில் களமிறங்கி அவர் தோல்வியைத் தழுவியிருந்தார்.
இந்நிலையில், அவர் தற்போதைக்கு மொட்டுக் கட்சியில் இருந்து விலகி, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவின் தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
