பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவி தொடர்பில் தீவிரமாக ஆலோசிக்கும் அரசாங்கம்
ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை நீக்குவதா அல்லது தக்கவைத்துக் கொள்வதா என்பதை அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவியின் எதிர்காலம் குறித்த அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து கருத்துரைத்துள்ள அமைச்சரவை பேச்சாளர்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அதனை தொடர்வதா அல்லது ஒழிப்பதா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
ஜெனரல் சில்வாவின் பதவிக்காலம் 2024 டிசம்பர் 31 அன்று முடிவடையும் என்றும், அரசாங்கம் இன்னும் இந்த விடயத்தில் ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு படைகளின் பிரதானி
ஜெனரல் சில்வா முதலில் 2022 ஜூன் முதலாம் திகதியன்று, பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டார், பின்னர் அவரின் பதவியை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2024 இறுதி வரை நீடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.