இலங்கை வந்த விமான பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
இலங்கை வந்த விமான பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 4 கோடியே 38 இலட்சத்து 80ஆயிரம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் குறித்த நபர் இலங்கை வந்துள்ளார்.
நேற்று காலை 11 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 403 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுங்க அதிகாரிகள்
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொழும்பில் வசிக்கும் 30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி என தெரிவிக்கப்படுகிறது.
அவர் வைத்திருந்த சூட்கேஸில் 04 கிலோகிராம் 388 கிராம் குஷ் என்ற போதைப்பொருள் அடங்கிய 05 பார்சல்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, குறித்த நபரும், அவர் கொண்டு வந்த குஷ் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.