நாட்டை உலுக்கிய இரட்டைக் கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி
அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (20.02.2026) அவர் குறித்த விடயத்தை அறிவித்துள்ளார்.
துப்பாக்கிதாரி அடையாளம்
அவர் மேலும் தெரிவிக்கையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குற்றத்துடன் தொடர்புடைய வாகனம் பத்தேகம பகுதியில் தீ வைத்து அழிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. குற்றத்திற்காக துப்பாக்கிகளை வழங்க வந்த வாகனம் கொட்டாவ பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்தியவர்கள், குற்றத்தை செய்வதற்கு முன் தங்குமிடத்திற்கு அழைத்து வந்த வாகனத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் உரிமையாளர் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேபோல், இந்தக் குற்றத்தைச் செய்வதற்காக ரிவால்வர் வகை துப்பாக்கியால் சுட்ட சந்தேகநபர், ருக்ஹாவெல பகுதியில் வசிக்கும் ரூபர்ட் சுரேஷ் என்று இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்த போது நிகழாத மிகப்பெரிய மாற்றம் தற்போது வடக்கில்.. தலைகீழாக மாறிய நிலைமை
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam