ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப இந்தியாவிடம் பங்களாதேஷ் கோரிக்கை
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை (Sheikh Hasina) நாடு கடத்துவது தொடர்பாக பங்களாதேஷ் (Bangladesh) உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து வாய்மொழிக் குறிப்பு கிடைத்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் அமைச்சு எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு
பங்களாதேஷில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
பங்களாதேஷில் ஹசீனா அரசு கவிழ்ந்ததையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இந்தச் சூழ்நிலையில் டாக்காவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச குற்ற தீர்ப்பாயம் (ICC) ஹசீனா, முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக பிடியாணையை பிறப்பித்தது.
இந்நிலையில் இடைக்கால அரசின் வெளியுறவுத் துறை ஆலோசகர் டோஹி ஹுசைன் செய்தியாளர்களிடம் கூறும்போது “ஷேக் ஹசீனா மீதான நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவரை பங்களாதேஷிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய அரசுக்கு தூதரக ரீதியாக கடிதம் எழுதி உள்ளோம்” என்று கூறியுள்ளார்.





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
