முல்லைத்தீவில் இறங்குதுறை இல்லாததால் அவல நிலையில் மியன்மார் அகதிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கப்பல் இறங்கு துறை ஒன்று இல்லாத நிலையால்தான் மியன்மார் அகதிகள் திருகோணமலை கொண்டுசெல்லப்பட்டு மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள அவல நிலைக்கு காரணம் என முள்ளியவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம் சிவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று( 25.12.2024) கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
இந்திய இழுவைப்படகு பிரச்சினை
“மிக நீண்டகாலமாக முல்லைத்தீவு கடல் பிரதேசத்தில் இந்திய இழுவைப்படகு பிரச்சினை காணப்படுகின்றது.
ஐனாதிபதி கடந்த வாரம் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அங்கு கடற்றொழில் சம்மந்தமான விடையங்கள் ஆராயப்பட்டுள்ளன.
2025 ஆண்டு தொடக்கம் ஐனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் இந்திய இழுவைப்படகு விடையம் ஆராயப்பட்டு கதைத்து முடிவெடுப்பார்கள்.
மேலும், இந்திய இழுவை படகுகளுடன் எமது கடல் பிரதேசத்துக்கு வருவதை நிறுத்தவேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |