கடந்த 24 மணிநேரத்தில் வீதி சட்டங்களை மீறிய ஆயிரக்கணக்கானோர் கைது
கடந்த 24 மணிநேரத்தில் வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நத்தார் மற்றும் புதுவருடம் உள்ளிட்ட பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பொலிஸார், விசேட வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, 8747 சாரதிகள் கடந்த 24 மணிநேரத்திற்குள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட சோதனை நடவடிக்கை
அத்துடன், பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கை காரணமாக நாட்டில் எப்பாகத்திலும் பாரிய விபத்துக்கள் இடம்பெறவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் தெரிவித்தள்ளது.
இந்நிலையில், மதுபோதையில் வாகனத்தை செலுத்தாமல், வீதிச் சட்டத்திட்டங்களை முறையாக கடைப்பிடிக்குமாறும் பொலிஸ் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |