கழுத்தில் பாய்ந்த கூரிய தடி: வெற்றிகரமாக அகற்றிய வவுனியா வைத்தியர்கள்
கழுத்தில் கூரிய தடி ஒன்று குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்களின் வெற்றிகரமான சத்திர சிகிச்சையினால் கூரிய தடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சத்திர சிகிச்சை நேற்றுமுன்தினம் (24.12.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கழுத்தில் கூரியதடி ஒன்று குத்தி மறுபக்கம் வந்த முதியவர் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் வவுனியா வைத்தியசாலையில் செவ்வாய்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சத்திர சிகிச்சை
குறித்த முதியவருக்கு வைத்தியசாலையில் உரிய நேரத்தில் விரைவாக முன்னெடுக்கப்பட்ட சத்திர சிகிச்சை மூலம் அவரது கழுத்தில் குத்திய தடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த வெற்றிகரமான சத்தி்ர சிகிச்சையினை உணர்வழியியல் மருத்துவ நிபுணர் நாகேஸ்வரன் தலைமையிலான மயக்கமருந்து அணியினருடன் இணைந்து சத்திர சிகிச்சை நிபுணர் ரஜீவ் நிர்மலசிங்கம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri