இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்குமாறு வடக்கு மக்கள் கோரவில்லை - ஆளுநர் நா.வேதநாயகன்
வடக்கு மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோருகின்றார்களே அன்றி இராணுவத்தினரின் காணிகளை அல்ல என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வசாவிளானில் நடைபெற்ற விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் மற்றும் மர நடுகை விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். தற்போது யாழ். மாவட்ட இராணுவத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனை உடைய ஒருவர்.
தேவையற்ற அழுத்தங்கள்
எனவே, இந்த அரசாங்கத்தின் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்க முடியும் என நம்புகின்றோம். இங்கு காணிகள், வீதிகள் விடுவிக்கப்பட்டதும் தென்னிலங்கையிலிருந்து சில தேவையற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.
தென்னிலங்கை மக்களுக்கு இங்கு நடைபெறுவது என்ன என்ற உண்மையை தெளிவுபடுத்துமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையை சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்திருக்கின்றேன்.
வடக்கு மக்கள் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும். விரைவில் சாதகமான விடயங்கள் நடக்கும் என நம்புகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
