இலங்கை கடற்பரப்பில் தாக்கப்பட்ட ஈரான் கப்பல்! புகைப்படங்களை வெளியிட்ட படையினர்
கடந்த 4 ஆம் திகதி காலி கடற்கரையில் பேரிடரில் சிக்கிய ஈரானிய கப்பலை மீட்கும் பணியின் போது, ஈரானிய கடற்றொழிலாளர்களுக்கு உதவிய புகைப்படங்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
மனிதாபிமான மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உயிர்காக்கும் படகுகளில் இருந்து இலங்கை கடற்படை கப்பல்களுக்கு ஈரானிய கடற்றொழிலாளர்கள் மாற்றப்பட்டனர்.
இலங்கைக்குள் நுழைந்த இரண்டு ஈரானிய கப்பல்களால் குழப்பத்தில் அரசாங்கம்! களமிறங்கியுள்ள புலனாய்வு அதிகாரிகள்
காலி துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்
இதன்போது பாதிக்கப்பட்ட ஈரானிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட காயமடைந்த ஈரானியர்களுக்கு மருத்துவ அதிகாரிகளும் இலங்கை கடற்படை கடற்றொழிலாளர்களும் அவசர சிகிச்சை அளித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்து ஈரானிய மாலுமிகளை மீட்கும் பணியை முடித்த பின்னர் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இராணுவப் பயிற்சியில் பங்கேற்ற பிறகு ஈரானுக்குச் சென்று கொண்டிருந்த ஐரிஸ் தேனா என்ற கப்பல், கடந்த 4 ஆம் திகதி இலங்கை கடற்கரையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலால் அழிக்கப்பட்டது.
இந்த கப்பலில் பயணித்த 180 கடற்றொழிலாளர்களில், 87 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேரை இலங்கை கடற்படை மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 23 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri