இலங்கையில் மரணத்திலும் போற்றப்படும் இளம் யுவதி
மாத்தளையில் பலருக்கு தன் உயிரைக் கொடுத்து தன் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்ட பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
மாத்தளை அதமலே பகுதியில் வசித்து வந்த 24 வயதுடைய உதேஷிகா சந்தமாலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன், காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கார் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானார்.
இரத்தக் கசிவு
இதனையடுத்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தமாலியை மூளையில் உள்ள இரத்தக் கசிவு காரணமாக காப்பாற்ற முடியாதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை அறிந்த சந்தமாலியின் குடும்பத்தினர் அவரது இதயம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புக்களை தானமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதற்கமைய, சந்தமாலியின் இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டுள்ளதுடன், பதுளை போதனா வைத்தியசாலையில் சிறுநீரகம் தேவைப்பட்ட நோயாளர் ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
மற்றைய சிறுநீரகம் கண்டி பொது வைத்தியசாலையில் உள்ள நோயாளி ஒருவருக்கு மாற்று சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அத்துடன் சந்தமாலியின் ஏனைய உடல் உறுப்புக்களை மேலும் சிலருக்கு கொடுக்க மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் இருந்த போதிலும், உயர் கல்வித் தரத்தை எட்டிய உதேஷிகா, இசையிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கியுள்ளார்.
குறித்த யுவதி மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன், பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளார். பல முறை புற்று நோயாளிகளுக்காக தனது தலைமுடியை கூட அவர் தானம் செய்துள்ளார்.