ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை : பெற்றோர்களால் போராட்டம் முன்னெடுப்பு
முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர் கடந்த 7 மாதங்களாக இல்லாத நிலையில் பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று (27.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக தொடரும் பிரச்சினை
தரம் 3 வகுப்பில் பயிலும் 36 மாணவர்கள் கடந்த 7 மாதங்களாக வகுப்பாசிரியர் இன்றி கல்வியில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

உடனடியாக நிரந்தர அல்லது பதிலீட்டு ஆசிரியரை நியமித்து, மாணவர்களின் கல்வி சீரழிவதைத் தடுக்க கல்வித் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர் nதரிவித்துள்ளனர்.
மேலும் பாடசாலையின் ஆசிரியர் இல்லாத பிரச்சினை தொடர்பில் வலயக்கல்லி அலுவலகத்திற்கு முறையிட்டும் எந்த தீர்வும் இதுவரை பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர .
நீண்டகாலமாக தொடரும் இந்த பிரச்சினைக்கு உரிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்து, விரைவான தீர்வினைப் பெற்று தரவேண்டும் என்பதுடன் இவ்வாறான நிலை தொடர்ந்தால் மாணவர்களின் ஆரம்ப கல்வி பின்நோக்கி செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கூடிய முக்கியஸ்தர்கள்: சர்வசன வாக்கெடுப்பு கட்டாயம் - சூடுபிடிக்கும் நிலவரம்

