விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக மேற்கொண்ட விடயம் தொடர்பான தேரரின் கருத்து அம்பலம் (VIDEO)
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியினால் மக்கள் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நேற்று வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதன்போது ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara) தெரிவித்த கருத்துகளை முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, மாவீரர் தினம் தொடர்பில் தான் கேட்டிருந்ததாகவும், பல்வேறு காலங்களிலும் மரணித்த மாவீரர்களை நினைவு கூர உரிமை உள்ளதாக சுட்டிக்காட்டியதாகவும் செல்வநாயகம் அரவிந்தன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் தான் முழுமையாக பதில் செல்ல முடியாது எனவும், இருந்தாலும் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக மேற்கொண்ட விடயம் தவறு, அதற்கு அனுமதிக்க முடியாது எனவும் ஞானசார தேரர் தெரிவித்ததாக செல்வநாயகம் அரவிந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam