நுவரெலியாவின் ஸ்ரீ கதிரேஷன் சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர இரதோற்சவ பெருவிழா
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியோரத்தில் வீற்றிருக்கும் கெலேகால அருள்மிகு ஸ்ரீ கதிரேஷன் சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர இரதோற்சவ பெருவிழா, பக்தி பூர்வமாக இன்று வியாழக்கிழமை(10) இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தில் 2025ஆம் ஆண்டுக்காக வருடாந்த பங்குனி உத்திர முத்தேர் தேர் திருவிழா கடந்த 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இதனையடுத்து, 09ஆம் திகதி புதன்கிழமை பால்குடம் பவனி மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் என்பன இடம்பெற்றன.
இரதோற்சவம்
அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம்(10) ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
மேள தாள வாத்தியங்கள் முழங்க மூன்று மூர்த்திகளும் உள்வீதி வலம் வந்து பிரதான வீதிகள் ஊடாக நுவரெலியா நகரில் வெளி வீதி எழுந்தருளி தனித்தனி தேரில் ஏறி முத்தேர் பவனியாக இரதோற்சவம் இடம்பெற்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam