புத்தாண்டுக்கான இனிப்பு தின்பண்டங்களின் உற்பத்தி செலவு தொடர்பில் வெளியான தகவல்
இந்த ஆண்டில் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கான பலகாரம், இனிப்பு தின்பண்டங்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிப்பு தின்பண்டங்கள்
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு இனிப்பு தின்பண்டங்களின் உற்பத்தி செலவு 7 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது 2019 ஆம் ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று வெரிட்டே ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யின் விலைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பே இதற்கான முக்கிய காரணமாகும் என பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மூலப்பொருட்களின் விலை
2024 ஆம் ஆண்டில், தின்பண்டங்களுக்கான மூலப்பொருட்களின் விலை 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.2 மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும் 2025 ஆம் ஆண்டில், இது 2019 ஆம் ஆண்டிலிருந்த விலையைவிட 2.4 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
