ட்ரம்பின் அழைப்பிற்கு செவிசாய்துள்ள நாடுகள்! அமைதியான அரசியல் மாற்றத்திற்கான அடித்தளம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள ‘அமைதி வாரியம்’ (Board of Peace) திட்டத்தில் சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து, ஜோர்டான், இந்தோனேஷியா, பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் இணைவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
அந்த நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
முயற்சிக்கு ஆதரவு
ஜோர்டான் வெளிநாட்டு அமைச்சகம் பகிர்ந்துள்ள அந்த அறிக்கையில், “டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் முன்னெடுக்கப்படும் அமைதி முயற்சிகளுக்கு தங்களது நாடுகள் முழுமையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
‘அமைதி வாரியம்’ ஒரு இடைக்கால நிர்வாகமாக செயல்பட்டு, நிரந்தர போர்நிறுத்தத்தை உறுதி செய்வதுடன், காசாவின் மறுசீரமைப்பை ஆதரித்து, சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, பாலஸ்தீன மக்களின் தன்னாட்சியும் நாட்டுரிமையும் அடிப்படையாகக் கொண்ட நீதியான மற்றும் நீடித்த அமைதியை முன்னெடுக்க உதவும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Joint Statement
— وزارة الخارجية وشؤون المغتربين الأردنية (@ForeignMinistry) January 21, 2026
The Foreign Ministers of the Hashemite Kingdom of Jordan, the United Arab Emirates, the Republic of Indonesia, the Islamic Republic of Pakistan, the Republic of Türkiye, the Kingdom of Saudi Arabia, the State of Qatar and the Arab Republic of Egypt welcome the… pic.twitter.com/KvZQJDWO6a
இந்த முயற்சி காசா பகுதியில் நிலவும் மோதல்களுக்கு தீர்வு காணும் நோக்குடன் முன்னெடுக்கப்படுவதாகவும், அமைதியான அரசியல் மாற்றத்திற்கான அடித்தளமாக இது அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காசா அமைதி வாரியத்தில் சேருவதற்கான டொனால்ட் ட்ரம்பின் அழைப்பை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கா முன்மொழிந்த காசா அமைதி வாரியத்தில் இணைய பிரான்ஸ் மறுத்தால், 200% வரி விதிப்பேன் என டொனால்ட் ட்ரம்ப் மிரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam