அமெரிக்கா, பலாத்காரமாக கிரீன்லாந்தை கைப்பற்றுமா! ட்ரம்பின் விளக்கம்
பலாத்காரமான அடிப்படையில் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோசில் உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடுமையான அணுகுமுறை
ட்ரம்ப் கிரீன்லாந்து தொடர்பாக தெரிவித்த கருத்துகள், உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

கிரீன்லாந்தை கட்டுப்படுத்துவதற்கு பலத்தை பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பை ட்ரம்ப் வெளிப்படையாக மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, வெனிசுவேலா உள்ளிட்ட நாடுகளில் ட்ரம்ப் எடுத்த கடுமையான அணுகுமுறைகளை கவனித்து வந்த கிரீன்லாந்து மக்கள், ஒருநாள் அமெரிக்க கடற்படையினர் தங்களது கரைகளில் இறங்கக்கூடும் என்ற அச்சத்தில் இருந்தனர்.
கிரீன்லாந்து மக்கள்
இந்த பின்னணியில், பலத்தை பயன்படுத்த மாட்டேன் என்ற ட்ரம்பின் அறிவிப்பு, ஒரு அளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றது.
எனினும், அவரது முந்தைய நடவடிக்கைகள் மற்றும் கடுமையான வெளிநாட்டு கொள்கை அணுகுமுறை காரணமாக, கிரீன்லாந்து மக்களிடையே முழுமையான நம்பிக்கை இன்னும் உருவாகவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam