இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கியின் அறிவிப்பு
நடப்பு 2026ம் ஆண்டில் இலங்கை ரூபாயின் மதிப்பு 6.6 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரத்தில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தைகள் இரண்டிலும் திறைசேரிப் பத்திரங்களின் வருவாய் பெருமளவில் நிலையாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வசமிருந்த திறைசேரிப் பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்களின் ரூபாய் மதிப்பு சுமார் 1.4 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மத்திய வங்கி கூறியுள்ளது.
வீழ்ச்சி
எனினும் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை (23) நிலவரப்படி, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 6.6 சதவீதம் சரிந்துள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri