பாப்பாண்டவருக்கு அமெரிக்க அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பு
காசா பகுதியில் போர் முடிந்த பின் நடைபெறும் நிலைமாறு கால நிர்வாகத்தை மேற்பார்வையிட உருவாக்கப்பட்டுள்ள சமாதான சபையில் இணைமாறு புனித பாப்பாண்டவர் 14ம் லியோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அழைப்பினை விடுத்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரத்தை வத்திக்கானுக்கான செயலாளர் பியெட்ரோ பரோலின் தெரிவித்துள்ளார்.

அந்த அழைப்பு வத்திக்கானுக்கு கிடைத்துள்ளதாக உறுதிப்படுத்தியதுடன், அதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாகவும் பியெட்ரோ உறுதி செய்துள்ளார்.
“இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஒரு முடிவை எடுப்பதற்கு முன், இதை கவனமாக சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் பதில் அளிக்க சிறிது காலம் தேவைப்படும்,” என பரோலின் தெரிவித்தார்.
டிரம்ப் முன்மொழிந்துள்ள இந்த சமாதான சபை மூன்று அடுக்குகளைக் கொண்ட சிக்கலான நிர்வாக அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது என முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதில், டிரம்பும் இஸ்ரேல் ஆதரவாளர்களும் மேல்நிலையில் இடம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாலஸ்தீனர்கள் நகராட்சி மட்டத்திலான பொறுப்புகளுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து டிரம்ப் நிர்வாகம் அதிகாரபூர்வ பதில்களை இதுவரையில் வெளியிடவில்லை.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri