பாகிஸ்தான் தொடர்: வெளியாகிய இலங்கை ஏ அணி விபரம்
பாகிஸ்தானுக்கு(Pakistan) இலங்கை ஏ அணி(Srilanka A Team) சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவானது இரண்டு அணிகளை தெரிவு செய்துள்ளது.
சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை அணி, இரு டெஸ்ட் ஆட்டங்கள் மற்றும் மூன்று ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
இதன்படி இலங்கை ஏ அணி 2024 நவம்பர் 7ஆம் திகதியன்று பாகிஸ்தான் செல்கிறது.
இலங்கை அணி
நான்கு நாள் ஆட்டங்களுக்கான அணியில், பசிந்து சூரியபண்டாரவின் தலைமையில், நிப்புன் தஹநாயக்க, ஓசத பெர்ணான்டோ, புலிந்து பெரேரா, பவன் ரட்நாயக்க, சோனால் தினுச, அசான் விக்கிரமசிங்க, விசாட் ரந்திக, வனுஜ சஹான், விஸ்வ பெர்ணான்டோ, இசித விஜயசுந்தர, சமிக்க குணசேகர, நிசல தாரக, ஏசியன் டேனியல், தினுர கலுப்பான ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் அணியில், நுவானிடு பெர்ணான்டோவின் தலைமையில், லஹிரு உதார, காமில் மிஸ்ரா, பசிந்து சூரியபண்டார, பவன் ரட்நாயக்க, சஹான் ஆராச்சிகே, அசான் விக்கிரமசிங்க, சோனால் தினுச, தினுர கலுப்பஹன, துசான் ஹேமந்த,கவிந்து நதீச வனுஜ சஹான், எசான் மாலிங்க, தில்சான் மதுசங்க மற்றும் நிப்புன் ரண்சிக ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam