கௌதம் கம்பீர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு!
இந்திய கிரிக்கட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின்(Gautam Gambhir) செயல் காரணமாகவே, இந்திய அணி, சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணியிடம் வெள்ளையடிப்பு தோல்வியை தழுவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையும் இந்த விடயத்தில் கம்பீரின் மீது அதிருப்தி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு இதற்கு முன்னர் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்(Rahul Dravid) இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளத்தை தயார் செய்வதில் தனி கவனம் செலுத்தி வந்தார்.
சுழற் பந்துவீச்சு
எப்போதும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்யக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். அவ்வாறான ஆடுகளங்களை எதிரணிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன என்பதை உணர்ந்ததன் காரணமாகவே அந்த நடைமுறையை அவர் கடைபிடித்து வந்தார்.
கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் தொடரான பங்களாதேஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இதே நடைமுறைதான் கடைபிடிக்கப்பட்டது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடந்த பெங்களூருவிலும் அதுபோன்ற ஆடுகளமே தயாரிக்கப்பட்டிருந்தது.
எனினும் முதல் போட்டியில் தோல்வி அடைந்த பினனர், பூனே மற்றும் மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டிகளுக்கு முதல் நாளிலிருந்து சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும் என கம்பீர் மற்றும் அவரின் துணை பயிற்சியாளர்கள் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்திய அணி
இந்த முடிவுக்கு இந்திய அணி நிர்வாகத்தில் சிலர் ஒப்புதலையும் வழங்கவில்லை. இருந்தபோதும், அதனை மீறி கௌதம்; கம்பீர் இந்த முடிவை எடுத்தார் என்று குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்தநிலையில் இதனை பயன்படுத்தியே நியூசிலாந்து சுழற் பந்துவீச்சாளர்கள் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியை வீழ்த்தினர் என்றும் கூறப்படுகிறது.
இதை அடுத்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்தமை தொடர்பில்,இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகள் பயிற்சியாளர்கள் குழுவிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |