மீண்டும் நடைமுறைக்கு வரும் ஆபிரிக்க- ஆசிய கிண்ணப் போட்டிகள்
சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் ஆப்பிரிக்க - ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான(Asia -Africa cricket league) முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பின் தலைவரும், சிம்பாப்வே கிரிக்கெட் சபையின் தலைவருமான டாவெங்வா முக்லானி(Tavengwa Mukuhlani) இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க - ஆசிய கிண்ணப்போட்டிகள், கிரிக்கெட்டுக்கு நன்மை செய்வது மட்டுமின்றி, ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்புக்கு தேவையான நிதியையும் பெற்றுத் தரும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய கிரிக்கெட் சபை
இந்த விடயத்தில் தாம், ஆசிய கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை இரண்டு முறை மட்டுமே ஆப்பிரிக்க - ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுள்ளது. முதல் முறையாக 2005 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்த போட்டி தொடர் நடைபெற்றது.
அடுத்து 2007 இல் இந்தியாவில் இந்தப் போட்டித் தொடர் நடைபெற்றது. இந்த இரண்டு முறைகளிலும்,ஆசிய அணியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து விளையாடியிருந்தனர்.
ஆப்பிரிக்க - ஆசிய கிண்ணப்போட்டி
எனவே, மீண்டும் ஆப்பிரிக்க - ஆசிய கிண்ணப்போட்டிகள் நடத்தப்பட்டால் அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2005 இன் ஆப்பிரிக்க - ஆசிய கிண்ண போட்டிகளின்போது, ஆசிய அணியில் பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹக் தலைமையில் குமார் சங்ககார, விரேந்தர் சேவாக், சாகீர் கான் அனில் கும்ப்ளே, சோயப் அக்தர், சஹித் அப்ரிடி ஆகியோர் விளையாடினர்.
2007 இல் நடந்த ஆப்பிரிக்க - ஆசிய கிண்ணப் போட்டிக்கான ஆசிய அணியில் மஹேல ஜெயவர்த்தன தலைமையில், வீரேந்தர் சேவாக், சனத் ஜெயசூர்ய, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், மஹேந்திரசிங் தோனி ஆகியோர் பங்கேற்றனர்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan