இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

Tamil nadu Tamil Nadu Police Sri Lanka Customs
By Ashik Oct 02, 2026 10:38 AM GMT
Report

மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 7 இலட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் மரைன் பொலிஸாரால் நேற்று (01.10.2026) இரவு பறிமுதல் செய்யப்பட்டதுடன் வாகன சாரதி கைது செய்யப்பட்டு சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் வேதாளை கடற்கரையில் கிடந்த 286 கிலோகிராம் நிறையுடைய பீடி இலை பண்டல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தனுஷ்கோடி, மண்டபம், மரைக்காயர்பட்டினம், குந்துகால், வேதாளை, களிமண் குண்டு உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

கடத்த கொண்டுவரப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள்

இந்நிலையில் வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக படகில் கடத்துவதற்கு வலி நிவாரணி மாத்திரைகள் சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சி ராணி தலைமையில் பொலிஸார் உச்சிப்புளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் | Painkiller Tablets Seized One Arrested

அப்போது மண்டபம் நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 7 இலட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரிடம் மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில் வலி நிவாரணி மாத்திரை அனைத்தும் மண்டபம் அடுத்த வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தனர்.

வழக்கு பதிவு

அதன் அடிப்படையில் சரக்கு வாகனத்துடன் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த மரைன் பொலிஸார் வாகன ஓட்டுநரை கைது செய்து மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து பின்னர் வாகனம், வலி நிவாரணி மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட நபரை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் மரைன் பொலிஸார் ஒப்படைத்தனர்.

இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் | Painkiller Tablets Seized One Arrested

மேலும் வேதாளை கடற்கரையில் சட்டவிரோத கடத்தல் சம்பவம் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நள்ளிரவு மரைன் பொலிஸார் கடற்கரையோரம் திடீர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது கடத்தல்காரர்கள் மரைன் பொலிஸார் வருவதை கண்டதும் கடற்கரையில் 286 கிலோகிராம் எடை கொண்ட 10 பீடி இலை பண்டல்களை கடற்கரை ஓரம் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்த மரைன் பொலிஸார் அதனையும் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் | Painkiller Tablets Seized One Arrested

ஈரான் தொடர்பில் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

ஈரான் தொடர்பில் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு: மீறினால் கடும் சட்ட நடவடிக்கை

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு: மீறினால் கடும் சட்ட நடவடிக்கை

11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US