ஆயிரத்தை கடந்த பொதுத்தேர்தல் விதிமீறல் முறைப்பாடுகள்
எதிர்வரும் பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1042 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 297 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 745 முறைப்பாடுகளும் 21 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் எதுவும் பதிவாகவில்லையென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டமீறல் முறைப்பாடு
தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை 10 வன்முறைச் சம்பவங்கள்பதிவாகியுள்ளன.
அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 863 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 179 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 11 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
