இலங்கைக்கு வருவதற்கு விமான நிலையத்தில் காத்திருந்த பெண் மரணம்
நாட்டுக்கு திரும்புவதற்காக குவைத் விமான நிலையத்தில் காத்திருந்த இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான நிரோஷா தமயந்தி என்ற 48 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக கடந்த 9ஆம் திகதி குவைத் சென்றிருந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
மரணம் குறித்து சந்தேகம்
உடல்நல குறைவால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தமது தாயார் நோயின்றி மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவிக்கும் புகைப்படங்கள் மற்றும் ஒலிப்பதிவுகளை அனுப்பி, முகவர் நிலையம் தம்மை தவறாக வழிநடத்தியதாக உயிரிழந்த பெண்ணின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.
உடல்நலக் குறைவு
பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகள் வெளிநாட்டுப் பயணத்திற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பதிவுகளை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என்பதை உடனடியாக வெளிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.

வெளிநாட்டிற்கு சென்ற மூன்று நாட்களுக்குப் பிறகு மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி அவருடன் பணிபுரிந்த குடியிருப்பாளர்கள் அவரை உள்ளூர் வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அழைத்து சென்றதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் திலக் ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri