யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில்: காதலன் கைது
அனுராதபுரம் - கும்பிச்சாங்குளம் சுதந்திர வலயத்திற்கு அருகில் யுவதியொருவர் காதலனினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.
இன்று (30) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் நகரிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய காதலன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் எப்பாவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய யுவதி படுகாயமடைந்துள்ளார்.

அனுராதபுரம் பொலிஸார் விசாரணை
இதன்போது பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான காதலி தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் சுமார் 9 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே குறித்த தாக்குதலுக்கு காரணம் என தெரியவருகின்றது.

தன்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்த காதலனிடம் கத்தியும் விச போத்தலும் இருப்பதை அறிந்த யுவதி அவரிடமிருந்து தப்பித்து சுமார் 500 மீற்றர் தூரம் ஓடிய நிலையில், காதலன் யுவதியை துரத்திச் சென்று தன்னிடமிருந்த கத்தியால் யுவதியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சம்பவத்தை அவதானித்த சிலர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தாக்குதல் நடத்திய காதலன் என கூறப்பட்ட நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam