துப்பாக்கிக் கலாசாரத்துக்கு பலியாகும் தொழில் வல்லுநர்கள்
கொழும்பில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவமானது, இந்த நாட்டில் பொதுமக்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு பாரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுதந்திரமாகச் சேவையாற்றுவதற்கான உரிமை
பொதுமக்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எந்தவொரு அரசினதும் அடிப்படைப் பொறுப்பாகும். தத்தமது துறைகளில் ஈடுபடும் நிபுணர்கள், எவ்விதமான மிரட்டல்கள் அல்லது அச்சுறுத்தல்கள் இன்றி சுதந்திரமாகச் சேவையாற்றுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள், ஏனைய துறைசார் வல்லுநர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்புக்குள் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் தற்போது பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளன என்றும் கவலை வெளியிட்டுள்ளது.
குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, தொழில் வல்லுநர்கள் அச்சமின்றிப் பணியாற்றுவதற்கு ஏற்ற வலுவான மற்றும் நம்பகமான பாதுகாப்பு வழிமுறையொன்றை அரசு உடனடியாகச் செயற்படுத்த வேண்டும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளது.
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam