புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலே எமது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்: சுமந்திரன் (video)
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலே நாங்கள் ஏற்கனவே கூறியதன் அடிப்படையிலே ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சுகாதாரம் சம்பந்தமான பலவித தேவைகள் நிவர்த்தி செய்யப்பட முடியாமலிருக்கின்றது. ஆனாலும் சுகாதாரத்துறையிலே வேலை செய்கின்றவர்கள் மிகுந்த அர்ப்பணிப்போடு வேலை செய்கின்றனர்.
பாடசாலை மட்டங்களிலே போதை பொருள் பாவனை அதிகரித்திருப்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை என்று தெரிய வந்திருக்கின்றது.
ஆகவே எங்களுடைய இளைஞர் யுதிகளை இந்த போதையில் இருந்து காப்பாற்றுகின்ற பாரிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
யாழ்ப்பாணத்தில் போதைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்ற ஒரு செயல்முறை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
சிறிய ஒரு நாடகமொன்று பயிற்றுவிக்கப்பட்டு மாணவர்களுக்கு அது எடுத்துக் காட்டப்படுகின்றது. அதோடு சேர்ந்து மாணவர்கள் தாங்களாகவே முன் வந்து நாங்கள் போதை பாவணையில் இருந்து விலகி இருப்போம் என்று சொல்வது மட்டுமல்ல எங்களுடைய நண்பர்களையும் அதிலிருந்து விலக்கி காப்பாற்றுவோம் என்று சத்தியபிரமாணம் செய்கின்ற ஒரு நிகழ்வாகவும் இது நடைபெறுகின்றது.
இந்த வேலை திட்டத்தை வடக்கில் மாத்திரமல்ல கிழக்கிலும் செய்வதற்கு உத்தேசித்து இருக்கின்றோம்.
போதைப் பொருள் விநியோகத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியாது இருந்தாலும் போதைப் பொருளுக்கு அடிமையாக இருப்பவர்களுடைய புனர்வாழ்வு என்பது ஒரு மிகவும் கடினமான செயற்பாடாக இருந்தாலும் போதைப் பொருளை பாவிப்பதிலிருந்து மாணவர்களை இளைஞர்களை தடுப்பதிலே எங்களுக்கு பாரிய பங்கு இருக்கின்றது.
அனைத்து தமிழ் கட்சிகள் சேர்ந்து ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கையில் தெட்டத் தெளிவாக சொல்லி இருக்கின்றோம். வடகிழக்கில் அதி உச்ச அதிகார பகிர்வு எங்களுடைய உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஒரு சமஸ்டிக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கு வருகின்றது பின்வரும் காணொளி,
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan