உடனடியாக கலைக்கப்படும் நிலையில் 33 அரச நிறுவனங்கள்! வெளியான முக்கிய அறிவிப்பு
அரசுக்கு சொந்தமான மற்றும் இலாபத்தில் இயங்காத தொழிற்பாட்டு நிலையில் இல்லாத 33 அரச நிறுவனங்கள் கலைக்கப்படும் நிலையில் உள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் கடந்த மார்ச் மாதம் அமைச்சின் கீழ் அரச நிறுவனங்களின் சீர்திருத்தத்திற்கான விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள்
மேலும், 2026 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க, பணியாளர் வருங்கால வைப்பு நிதி, பணியாளர் நம்பிக்கை நிதி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் பணிக்கொடை கொடுப்பனவுகள் தொடர்பான நிலுவையில் உள்ள கடன்களை தீர்க்க கருவூலம் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக, இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில், அரச நிறுவனத்துறை பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த சவால்களுக்கு மத்தியிலும், 51 பெரிய அரச நிறுவனங்கள் 2026 முதல் ஆறு மாதங்களில் 259.3 பில்லியன் ரூபாவை மொத்த இலாபமாகப் பதிவு செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அந்த நிறுவனங்கள் பதிவு செய்த மொத்த இலாபம் 227.8 பில்லியன் ரூபாவாகும்.
நிதி அமைச்சின் தகவலின்படி, 51 பிரதான அரச நிறுவனங்களின் மொத்த இலாபம் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 31.5 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.
சற்றுமுன்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல்! பிணை கோரிக்கை தொடர்பில் பிறப்பிக்கப்படவுள்ள உத்தரவு
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam