நாடாளுமன்ற விவாதத்தைக் கோரி எதிர்க்கட்சிகள் பிரேரணை
நீதிமன்றங்களுக்கு நிறைவேற்று அதிகாரத்தால் விடுக்கப்படும் அழுத்தங்களைக் கண்டித்தும், இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசர விவாதத்தை நடத்துமாறு கோரியும் எதிர்க்கட்சிகளினால் தயாரிக்கப்பட்ட விசேட பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த கோரிக்கை இன்று(06.05.20226) முன்வைக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுயாதீனத்தன்மை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட இந்தப் பிரேரணையை, எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர்.

அத்துடன், எதிர்க்கட்சியின் பிரதம கொரடா கயந்த கருணாதிலக தலைமையில் சென்ற குழுவில், பிரதி கொரடாக்களான ஜே.சி.அலவதுவல, அஜித் பி. பெரேரா உள்ளிட்ட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
மேலும், அண்மைக்காலமாக நீதித்துறையின் செயற்பாடுகள் மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் தீர்ப்புகள் குறித்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் வெளியிடப்படும் கருத்துக்கள், நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்த விவகாரம் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களைப் பாதிக்கும் என்பதால், இது குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் இந்தப் பிரேரணை ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
நடிகராக ரூ. 275 கோடி மேல் சம்பாதித்த விஜய் இனி அரசியல்வாதியாக வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Cineulagam