கடவுச்சீட்டுகளை பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கிளை அலுவலகங்களுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்கள், இன்று (29) முதல் இணையவழியில் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு (Online) செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் மற்றும் வழக்கமான சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக வரும் அனைவருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்ல தலைமை அலுவலகத்திற்கு வருபவர்கள்
அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், சம்பந்தப்பட்ட சேவைகளைப் பெற வருவதற்கு முன்பு இணையவழியில் ஒரு சரியான நேரத்தை முன்பதிவு செய்யுமாறும், குறிப்பிட்ட அந்த நேரத்தில் மட்டுமே அலுவலகங்களுக்கு வருகை தருமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கண்டி, யாழ்ப்பாணம், குருநாகலை, வவுனியா மற்றும் மாத்தறை ஆகிய கிளை அலுவலகங்கள் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்று திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.
இருப்பினும், பத்தரமுல்ல தலைமை அலுவலகத்தில் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு இந்த நேர முன்பதிவு முறை பொருந்தாது என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மேலும் குறிப்பிடுகின்றது.
பட்டத்து இளவரசரின் படுகொலை... திகிலூட்டும் 3 கணிப்புகளை வெளியிட்ட அமெரிக்க நாஸ்ட்ராடாமஸ் News Lankasri