ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ள அர்னாப் புயல் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' (Arnab) புயல் வடக்கு கடற்கரைக்கு அருகே நிலை கொண்டிருந்த நிலையில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அமைப்பு மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து, இன்று காலை (29) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இன்று மாலை 5.30 மணிக்குள் குறைந்த காற்றழுத்தப் பகுதியாகவும் வலுவிழக்க வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
விலக்கிக்கொள்ளப்படும் எச்சரிக்கை
இதனையடுத்து வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் இந்த அமைப்பின் தாக்கம் நாள் முழுவதும் படிப்படியாகக் குறையும்.
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பல நாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
இதற்கிடையில், நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 5-6 கி.மீ. (25-35) ஆக உள்ளது.
கடல் கொந்தளிப்பாக மாறக்கூடும்
புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 45 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது, அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று (மணிக்கு 60-70 கி.மீ.) வீசக்கூடும் என்றும், அப்போது அப்பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.