அனோஜனின் விடுதலைக்காக கொழும்பில் தொடர் போராட்டம் - அரசிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை
கொழும்பில், சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராஜா அனோஜன் விடுதலை பெறவேண்டும் என கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது, நேற்று(24.09.2026) கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
போராட்டம் தொடரும்..
தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த கணிசமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் அனோஜனது விடுதலை வேண்டியும், அனோஜனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஒன்றிணைந்து குரல் எழுப்பியுள்ளனர்.
அத்துடன் அனோஜனுக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri