சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் 20 நாட்களில் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
நடப்பு செப்டம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 107,093 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து 32,536 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
அதேபோன்று, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 7,906 பேரும், ஆஸ்திரேலியாவிலிருந்து 7,393 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், 2026 ஜனவரி 01 முதல் செப்டம்பர் 20, வரையிலான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 16,42,215 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில், இந்தியாவிலிருந்து 418,019 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய ராச்சியத்திலிருந்து 157,895 பேரும் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam