இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை
இலங்கையில் அதிகரித்துள்ள திடீர் விபத்துக்கள் காரணமாக ஆண்டு தோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், ஊனம் மற்றும் உயிரிழப்புகளுக்கு ஒரு முக்கிய காரணியாகவும் திடீர் விபத்துகள் விளங்குவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இறப்பு வீதம் அதிகரிப்பு
சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கானோர் விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெறும் நிலை ஏற்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 30 இலட்சம் பேர் விபத்துகள் காரணமாக மருத்துவ சிகிச்சையை நாடுகின்றனர்.
அதாவது, ஒவ்வொரு எழு பேரில் ஒருவருக்கு இத்தகைய ஆபத்துகள் ஏற்படுகின்றன.
சராசரியாக, ஒவ்வொரு நிமிடமும் 6 முதல் 8 இலங்கையர்கள் சிகிச்சை தேவைப்படும் வகையிலான விபத்து சார்ந்த காயங்களுக்கு உள்ளாகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 15 முதல் 44 வயதுக்குட்பட்ட, பொருளாதார ரீதியாகச் செயல்படும் வயதினராக உள்ளனர் என்பதையும், இவர்களிடையே விபத்துகளே இறப்புக்கான முதன்மைக் காரணமாக இருப்பதையும் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
விபத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் ஆண்டுதோறும் 2,500 முதல் 3,000 பேர் உயிரிழக்கின்றனர்.
திடீர் வீதி விபத்துக்கள்
அதேவேளையில், இலங்கையில் ஆண்டுதோறும் நிகழும் மொத்தம் 1,50,000 இறப்புகளில் 8 சதவீதத்தினர் (சுமார் 8,000 முதல் 10,000 பேர்) திடீர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.
இதன்படி, 7,000-க்கும் மேற்பட்ட விபத்து மரணங்கள், பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையைச் சென்றடைவதற்கு முன்பாகவே நிகழ்கின்றன என்றும் தெரியவந்துள்ளது.

தேசிய விபத்து கண்காணிப்பு அமைப்பின் தரவுகளின்படி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களில் 25-27 சதவீதம் பேர் கீழே விழுந்ததால் பாதிக்கப்படுபவர்கள் ஆவர்.
15 சதவீதம் பேர் சாலை விபத்துகளால் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். மேலும், பொருட்கள் விழுதல், விலங்குகள் கடித்தல், தாக்குதல்கள் மற்றும் வெட்டுக் காயங்கள் போன்றவற்றாலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்படுகின்றனர்.
வெளிநோயாளிகளில் 70 சதவீதம் பேர் விலங்குகள் கடித்ததற்கான சிகிச்சை பெறுகின்றனர். வீதி விபத்துகளால் ஆண்டுதோறும் சுமார் 2,500 பேர் உயிரிழக்கின்றனர்.
தவறான முடிவுகளால் அதிகரிக்கும் உயிரிழப்பு
அதேவேளையில் தற்கொலைகளால் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். உதாரணமாக, நீரில் மூழ்குதல், நஞ்சு உட்கொள்ளல், பாம்பு கடித்தல், மின்சாரம் தாக்குதல் வன்முறைச் செயல்கள் மற்றும் கொலைகள் ஆகியவை பிற காரணங்களாக உள்ளன.
விபத்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை வீடுகளிலும், சுமார் கால் பகுதி வீதிகளிலும் நிகழ்கின்றன. விபத்துகளால் ஏற்படும் வாழ்நாள் முழுவதுமான ஊனத்துடன் பல்லாயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இத்தகைய பாதிப்புகள் பாதிக்கப்பட்டவர்களைச் சீர்குலைப்பது மட்டுமல்லாமல், குடும்பங்கள், சமூகம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றின் மீதும் நீண்டகாலச் சுமைகளை ஏற்படுத்துகின்றன.
நாட்டின் சுகாதார வரவு - செலவுத் திட்டத்தில் கணிசமான பகுதி விபத்து சிகிச்சைக்காகச் செலவிடப்படுவதால், நிலையான வளர்ச்சிக்கு விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள் மிக அவசியமானவையாக உள்ளன.
விழிப்புணர்வு, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் பொறுப்பான நடத்தை ஆகியவற்றின் மூலம் பெரும்பாலான விபத்துகளைத் தடுக்க முடியும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam