விநாயகர் சிலை சேதம்: மர்ம நபர்களுக்கு எதிராக நீதிக்கோரி போராட்டத்தில் குதித்த மக்கள்
பலாங்கொடை - உடக்கந்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர சித்தி விநாயகர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பில், தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நியாயம் கோரி பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களின் கோரிக்கை
அத்துடன் ஆலயத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சிலை சேதப்படுத்தல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் முழுமையான விசாரணையை முன்னெடுத்து, உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னணியில் யார் இருந்தாலும், அவர்களின் இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாது சட்டத்தின் அடிப்படையில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan