நானாட்டான் மேய்ச்சல் தரை விவகாரத்தில் தொடரும் சிக்கல் நிலை
மன்னார்(Mannar) - நானாட்டான் பகுதியில் உள்ள மேய்ச்சல் தரைகள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பாக வடக்கு ஆளுநர் நா.வேதநாயகனிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநரிடம் இன்று(12.11.2024) நானாட்டான் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினர் குறித்த மனுவை கையளித்துள்ளனர்.
கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் மன்னார் - நானாட்டான் பகுதியில் கால்நடை வளர்ப்போர்கான மேய்ச்சல் தரைகள் ஒதுக்கப்பட்டுள்ள போதும் அந்த இடங்கள் இன்னும் கையளிக்கப்படாமல் உள்ள நிலை தொடர்பில் அவர்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேய்ச்சல் தரை
இந்த விடயம் தொடர்பில் நானாட்டான் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கே.எம்.நிஹால் கருத்துத் தெரிவிக்கையில்,
"2 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றார்கள். இவற்றுக்குரிய மேய்ச்சல் தரை காணி ஒதுக்கப்பட்டுள்ளபோதும் அவை எங்களிடம் கையளிக்கப்படவில்லை.

மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைச் சிலர் சட்டவிரோதமாகக் காடழிப்பு செய்து பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதில் ஒரு சில அரச அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

எனவே, இந்தப் பிரச்சினை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரிடம் மனு ஒன்றை கையளித்துள்ளோம். என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam