மட்டக்களப்பில் குறைந்தளவில் பதிவாகியுள்ள தேர்தல் முறைப்பாடுகள்
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று (11) நள்ளிரவு முதல் நிறைவுபெற்றுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 218 தேர்தல் விதி முறை மீறல்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும், இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜி.ஜி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (12) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வாக்கெண்ணும் நிலையம்
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,49,686 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதுடன் தபால் மூலம் வாக்களிப்பதற்கு17,003 பேரும் தகுதி பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பிரதான வாக்கெண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரி செயற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
