முல்லைத்தீவில் கடலில் மூழ்கி ஒருவர் மாயம்
முல்லைத்தீவு(Mullaitivu) - நாயாறு கடல் பகுதியில் நீராடச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவில் இருவர் நீரில் மூழ்கியதில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் இன்று( 28.04.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம்(Jaffna) - கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே நீரில் மூழ்கி காணாமல் போய் உள்ளதுடன் திருகோணமலையை(Trincomalee) சேர்ந்த இளைஞன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மீட்பு நடவடிக்கை
இளைஞர் குழுவினர் நீராடிக் கொண்டிருக்கும் போது ஒரு இளைஞனை கடல் நீர் இழுத்துச் சென்றுள்ளதை தொடர்ந்து காப்பாற்ற முற்பட்ட மற்றொரு இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார்.
நாயாறு கடற் படையினரின் உதவியுடன் ஒரு இளைஞன் உயிருடன் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய இளைஞனை தேடும் நடவடிக்கை இன்று (28) மாலை வரை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மீட்கப்படவில்லை என கடற் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தேடு நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் பிரதேச இளைஞர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 22 மணி நேரம் முன்

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan
