நடப்பு ஆண்டில் சந்தேகத்தின் பேரில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் கைது!
நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 104,602 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கு மேலதிகமாக 5,101,516 பேர் சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்டுள்ளனர்.
நாளாந்த சோதனை
குறித்த நபர்களில் 4630 பேர் குற்றங்களுக்காக நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் இதுவரை நடத்தப்பட்ட பொலிஸாரின் நாளாந்த சோதனையில் 955 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அத்துடன் 1,422 கிலோகிராம் ஐஸ், 471 கிலோகிராம் ஹஷிஷ், 29 கிலோகிராம் கொக்கேய்ன், 13,773 கிலோகிராம் கஞ்சா, 3.5 மில்லியன் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுதவிர 61 டி-56 மற்றும் 62 கைத்துப்பாக்கிகள் உட்பட 1,721 ஆயுதங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.



