சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான ஆயுதங்கள் மீட்பு
ஐஸ் போதைப்பொருள் உற்பத்தியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மித்தெனிய பகுதியில் புதைக்கப்பட்டிருந்த 9மிமீ துப்பாக்கி, இரண்டு T-56 மாகஸீன், 115 சுற்று T-56 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டு என்பனவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பத்மேவிடம் மேற்கொண்ட விசாரணைகளின்
இந்த ஆயுதங்கள் சம்பத் மனம் பேரி என்பவருக்கு சொந்தமானவை என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இரசாயனக் கொள்கலன்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொள்கலன்கள் பாதாள உலகக்குழு தலைவர் கெஹல்பத்தர பத்மேக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படுகின்றது.
பத்மேவிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




