முல்லைத்தீவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி
முல்லைதீவு - அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(11.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கரிப்பட்டமுறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த 62 வயதுடைய முத்துத்தம்பி கிருஸ்ணசாமி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யானை தாக்குதல்
குறித்த நபர் முல்லைதீவு அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் பகல் வேளை வீதியால் சென்று கொண்டிருந்த போதே யானை தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி S.H.மஹ்ரூஸ் சடலத்தை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு சென்று பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.
கரிப்பட்டமுறிப்பு, அம்பகாமம், ஒலுமடு உள்ளிட்ட பகுதிகளில் பகல் வேளைகளில் யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனால் விவசாயிகளும் பாடசாலை மாணவர்களும் வீதிகளில் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பாக யானையின் தாக்கத்தால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
