தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் கைது
வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் சந்தேகந நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதும் தன்னை அச்சுறுத்தும் நோக்கில் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தாரக நாணயக்கார முறைப்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் சம்பவம் தொடர்பாக 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

கட்சிகளை விட தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதுவே முக்கியம் - சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டு!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




