ஒமிக்ரோன் வைரஸ் உலகம் முழுதும் வேகமாக பரவலாம் : உலக சுகாதார அமைப்பு
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு உலகம் முழுவதும் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது உலகில் சில பிராந்தியங்களில் கடும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதுடன் மிக அதிகமான உலக தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாக அந்த அமைப்பு கணித்துள்ளது.
இதன் காரணமாக தமது நாடுகள் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டு, அதனை வேகப்படுத்த வேண்டும் உலக சுகாதார அமைப்பு தனது 194 உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனடிப்படையில், அத்தியவசிய தரப்பினரை அடையாளம் ண்டு, அவர்களுக்கு முழுமையான தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைப்பு தனது உறுப்பு நாடுகளில் கேட்டுள்ளது.
அத்துடன் அவசரமான சந்தர்ப்பங்களில் சுகாதார சேவைகளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய வகையிலான திட்டங்கள் உருவாக்குமாறும் உலக சுகாதார அமைப்பு மேலும் கோரியுள்ளது.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
