மட்டக்களப்பில் முதலை கடிக்கு இலக்காகி முதியவர் பலி
மட்டக்களப்பு- வாழைச்சேனை (Valaichchena) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொண்டுகள்சேனை பகுதியில் முதலை கடித்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது காலாந்தனைப் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வைத்திய பரிசோதனை
பொன்டுகள்சேனை நீரோடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, முதலை கடித்து நீருக்குள் இழுத்துச் சென்றதினால் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த நபரின் உடலை மரண விசாரணை அதிகாரி நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் வைத்திய பரிசோதனைக்காக உடலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
