இலங்கையின் சீர்திருத்த முயற்சிகளை ஊக்குவிக்கும் அமெரிக்கா
இலங்கை அரசாங்கத்தினால் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சீர்திருத்தங்களை தொடருமாறு அமெரிக்கா (America) வலியுறுத்தியுள்ளது.
ஆசியாவின் யு.எஸ்.ஐ.டி (USAID) பணியகத்தின் பிரதி உதவி நிருவாகியுடன் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நடத்திய சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் கூறப்பட்டுள்ளது.
இதன்போது, தற்போதைய நிர்வாக சீர்திருத்தங்களுக்குமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரண்டு தரப்பும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறப்பு கலந்துரையாடல்
மேலும், அமைச்சர் செஹான் சேமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டத்தில் பங்கேற்பதற்காக வோசிங்டன் சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் பலதரப்பு விவகாரங்கள், வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக் கொள்கைகளுக்கான உதவிச் செயலாளருடனும் சந்தித்து கலந்தரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பணத்திற்காக என்னை பயன்படுத்தினார் - குகையில் வாழ்ந்த ரஷ்யா பெண்ணின் கணவர் குற்றச்சாட்டு News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
